ஒன்றரை இலட்சம் பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் தடை!

சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலையால் ஏற்பட்ட சில அனர்த்தங்களினால் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

நேற்றும் இன்றும் சில பகுதிகளில் மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன், வெள்ளம் ஏற்பட்டுள்ளமையினால் இந்த சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous articleரஜினிமுருகன் படத்தில் நடித்த பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்!
Next articleஇந்த மாதத்தில் மாத்திரம் 430 டெங்கு நோயாளர்கள்!