மொரட்டுவ பகுதியில் இயங்கிவந்த விபச்சார நிலையமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்த மூன்று பெண்களையும், அங்கு வந்திருந்த இரு ஆண்களையும் கைது செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக கடந்த 13 ஆம் திகதி இரவு முதல் நாடு முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடைக்கு மத்தியிலும் மிகவும் சூட்சுமமான முறையில் இவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.