மன்னார் மாவட்டத்தில் 4 ஆவது கொரோனா தொற்று மரணம் இன்றைய தினம் நிகழ்ந்துள்ளது!

மன்னார் மாவட்டத்தில் 4 ஆவது கொரோனா தொற்று மரணம் இன்றைய தினம் புதன் கிழமை மதியம் நிகழ்ந்துள்ளது.
இதனை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் உறுதி படுத்தி உள்ளார்.

கடந்த ஒரு வாரமான மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் திருக்கேதீஸ்வரத்தைச் சேர்ந்த 64 வயதுடைய (ஆண்) கொரோனா தொற்றாளர் ஒருவர் செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையிலேயே அவர் இன்று புதன் கிழமை (19) உயிரிழந்தார்.

அவருடைய மரணத்திற்கு கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணம் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மேலும் தெரிவித்தார்.

Previous articleகொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்ய புதிய இணையத்தளம்!
Next articleஇன்றைய ராசிபலன்-19.05.2021