வவுனியாவில் சுகாதாரத் தரப்பினர் மேற்பார்வை

வவுனியா இலங்கை வங்கியின் நகரக்கிளை மற்றும் வியாபார நிலையங்களில் சுகாதார அதிகாரிகள் இன்றையதினம் விசேட மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் பல்வேறு நடவடிக்கைகள் சுகாதாரபிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அந்த வகையில் சுகாதார வைத்திய அதிகாரி யூட் பீரிஸ் தலைமையில் வவுனியாவில் அமைந்துள்ள இலங்கை வங்கி அலுவலகம், மற்றும் வியாபார நிலையங்கள்,உணவகங்களில் இன்று காலை விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சுகாதார நடைமுறைகளை பேணாமை மற்றும் முககவசங்கள் அணியாதவர்களின் விபரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர். வவுனியா சுகாதாரவைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பரிசோதகர்களால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Previous articleஇன்றைய ராசிபலன்-19.05.2021
Next articleபொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்படும் தினங்கள் வெளியானது!