காதலருடன் நயன்தாரா தடுப்பூசி செலுத்தியதில் சர்ச்சை!

நடிகை நயன்தாரா நேற்று கொரொனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக கூறப்படும் நிலையில் இன்று இதுகுறித்து சர்ச்சை உருவாகியுள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது.

அது மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலர் தங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு அதன் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படம் வெளியானதையடுத்து ஆயிரக்கணக்கானோர் தடுப்பூசியை வலியவந்து போட்டுக் கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது காதலியும் நடிகையுமான நயன்தாரா ஆகிய இருவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.

இந்நிலையில், நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என சர்ச்சை உருவாகியுள்ளது. நேற்று நயன் தாரா தடுப்பூசி போடும்போது, அவருக்கு ஊசி செலுத்தியவர் விரல்களால் ஊசி போடுவது போல் சும்மா பாவ்லா காட்டியதாகவும் ஆனல் இந்தப் புகைப்படங்கள் அவருக்கு ஊசி போட்டதாக பரப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தன் மீதான் சர்ச்சைக்கு நயன் தாரா விளக்கம் அளிப்பாரா என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Previous articleதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா!
Next articleசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு