சுவிஸில் கத்திக்குத்தில் முடிந்த இளைஞர்களின் வாக்குவாதம்!

சூரிச் மண்டலம் Wädenswil பகுதியில் வாக்குவாதத்தில் ஏற்பட்ட இளைஞர்கள் சிலர், பின்னர் கத்தியால் தாக்கிக்கொண்ட சம்பவத்தில் நால்வர் கைதாகியுள்ளனர்.

அவர்கள் வாக்குவாதத்தில் ஏற்பட்ட சம்பவம் குறித்து தகவல் ஏதும் இல்லை. இரவு 7 மணியளவில் இரண்டு குழுக்களுக்கு இடையே இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் கத்தியால் தாக்கும் நிலைக்கு இந்த வாக்குவாதம் எட்டியுள்ளது. இதில் நால்வர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் நால்வர் பொலிசாரிடம் சிக்கியுள்ளனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவரும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றே பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அவர்களில் பலர் ஆப்கானிஸ்தான், ஜேர்மனி மற்றும் சுவிஸ் குடிமக்கள் என்றே கூறப்படுகிறது. அனைவரும் Horgen மாவட்டத்தில் குடியிருப்பவர்கள் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Previous articleசுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு
Next articleமட்டக்களப்பில் 14 சிவப்பு கொரொனா வலயங்கள்