மட்டக்களப்பில் 14 சிவப்பு கொரொனா வலயங்கள்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 கைதிகள் உட்பட 59 பேருக்கு ஒரேநாளில் இன்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் வாகரை மற்றும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா இருவர் உட்பட 4 பேரும் ஆரையம்பதி, பட்டிருப்பு, வாழைச்சேனை, கோறளைப்பற்று , ஓட்டுமாவடியில் தலா ஒருவர் உட்பட 5 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை மாவட்டத்தில் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் சிவப்பு வலயமாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

எனவே மாவட்டத்தின் தொற்று அதிகரிப்பை கருத்திற்கொண்டு பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.

Previous articleசுவிஸில் கத்திக்குத்தில் முடிந்த இளைஞர்களின் வாக்குவாதம்!
Next articleஎரியூட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!