உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண இரசிகர்களுக்கு அனுமதி!

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண, 4,000 இரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தி ஹாம்ப்ஷைர் கவுன்டி கழகத்தின் தலைவர் ரொட் பிரான்ஸ்குரோவ் கூறுகையில், ‘ஐ.சி.சி.யும் இங்கிலாந்து கிரிக்கெட் சபை, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு 4,000 பார்வையாளர்களை அனுமதித்துள்ளது.

இதில் 50 சதவீத டிக்கெட்டுகள் ஐசிசி வசம் சென்றுவிடும். எனவே மீதமுள்ள 2,000 டிக்கெட்டுகளை நாங்கள் விற்பனை செய்வோம். டிக்கெட்டுகள் குறித்து ஏற்கெனவே இரசிகர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன’ என கூறினார்.

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, எதிர்வரும் ஜூன் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Previous articleரொறொன்ரோவில் வார இறுதியில் 19,000 புதிய கொவிட் தடுப்பூசி மையங்கள் அமைப்பு!
Next articleகழுத்தில் அசிங்கமாக தொங்கும் சதையை குறைப்பதற்கான எளிய வழிகள் இதோ!