கழுத்தில் அசிங்கமாக தொங்கும் சதையை குறைப்பதற்கான எளிய வழிகள் இதோ!

நமது வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே, கழுத்தில் அசிங்கமாக தொங்கும் சதையை எப்படி குறைப்பது என்பது குறித்து இங்கு காண்போம்.

கழுத்து சதை

கழுத்தைச் சுற்றி காணப்படும் தொங்கும் தசைகள் உடல் பருமன் காரணமாகவே ஏற்படுகிறது. மேலும் வயதாகுதல், நீர் தேக்கம், ஹைப்போ தைராய்டிசம், பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் போன்ற காரணங்களாலும் கழுத்தைச் சுற்றி சதை ஏற்படும்.

இதுபோன்ற தொங்கும் கொழுப்புகளை உடனே கரைக்க வேண்டும். இல்லையெனில் இதய நோய்கள், டயாபெட்டீஸ் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

கிரீன் டீ

கிரீன் டீயில் பாலிபினோல் மற்றும் ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், இது உடல் எடையை குறைக்க உதவும். எனவே கிரீன் டீயை தொடர்ந்து, ஒரு நாளைக்கு 2 1/2 Cup குடித்து வந்தாலே கழுத்தில் தொங்கும் சதையை குறைக்க முடியும்.

முலாம்பழம்

முலாம்பழத்தில் விட்டமின் A, பொட்டாசியம் மற்றும் குறைந்த கலோரி, குறைந்த கொழுப்புகளைக் கொண்ட ஏராளமான விட்டமின்கள், தாதுக்கள் உள்ளன.

எனவே, முலாம்பழத்தை ஜூஸ் செய்து பருகி வருவதன் மூலம், கழுத்தில் உள்ள கொழுப்பை கரைக்க முடியும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் உங்கள் கழுத்தில் தங்கியிருக்கும் கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது, உடலில் உள்ள மெட்டா பாலிசத்தை அதிகரித்து கொழுப்பை கரைக்க உதவும்.

கழுத்தில் தேங்காய் எண்ணெய்யை கொண்டு, தினமும் 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். மேலும், சமையலில் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துவதன் மூலம் கழுத்தில் தொங்கும் சதையை குறைக்கலாம்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸை குடித்து வருவதன் மூலம் கழுத்தில் தொங்கும் சதையை எளிதில் குறைக்கலாம். மேலும், இதன்மூலம் உடல் எடையும் வேகமாக குறையும். எலுமிச்சையில் உள்ள விட்டமின் C உடலில் உள்ள மெட்டா பாலிசத்தை அதிகரிக்கும். இதனால் கொழுப்புகள் விரைவில் கரையும்.

ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீரில், பாதி அளவு எலுமிச்சை பழத்தை கலந்து அத்துடன் தேன் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.

ஆளி விதைகள்

ஆளி விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. எனவே, ஆளி விதைகளை ஸ்மூத்தி மற்றும் சாலட் போன்ற உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கழுத்தில் தொங்கும் சதையை குறைக்க முடியும்.

ஒரு தேக்கரண்டி ஆளி விதை பொடியை எடுத்துக் கொண்டு, ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலக்க வேண்டும். அதனுடன் கொஞ்சம் தேன் சேர்த்தும் பருகலாம்.

குடை மிளகாய்

குடை மிளகாயை சாலட் மற்றும் உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும். இதில் 37 கலோரிகள் மற்றும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், கழுத்தில் தொங்கும் சதையை விரைவாக குறைக்கும்.

கேரட்

கேரட்டில் நிறைய நார்ச்சத்துக்கள் மற்றும் விட்டமின் A போன்றவை உள்ளன. நார்சத்தினால் ஜீரணம் ஆவது வெகு நேரம் ஆகும். இதனால் நீண்ட நேரம் பசிக்காததால், இதன் மூலம் உடல் எடை வெகுவாக குறையும். எனவே, தினசரி கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சூரிய காந்தி விதைகள்

சூரிய காந்தி விதைகளில் விட்டமின் E மற்றும் விட்டமின் B போன்ற பொருட்கள் உள்ளன. எனவே தினசரி உணவுப் பழக்கத்தில் சூரிய காந்தி விதைகளை சேர்ப்பதன் மூலம், கழுத்தில் தொங்கும் சதையை போக்கும். மேலும், இது வயதாவதையும் தடுக்கும்.

தினமும் ஒரு தேக்கரண்டி சூரிய காந்தி விதைகளை எடுத்துக் கொண்டு, நல்ல வாழைத்தண்டு போன்ற அழகான கழுத்தை பெறலாம்.

தண்ணீர்

தண்ணீர் உடல் எடையை குறைக்காவிடிலும், உடலில் உள்ள அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்றும். ஒரு நாளைக்கு 8 முதல் 10 தம்ளர் வரை தண்ணீரை பருக வேண்டும். இதன்மூலம், பசி மற்றும் உங்கள் உடல் வெப்பநிலையை கட்டுப்பாட்டில் வைக்கும்.

எனவே, காபி மற்றும் சோடாவை தவிர்த்து பழங்கள், காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Previous articleஉலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண இரசிகர்களுக்கு அனுமதி!
Next articleவலிமை பட தயாரிப்பாளருக்கு கோடிக்கணக்கில் இழப்பு!