முக கவசத்தை சரியாக அணியாமல் வியாபாரம் செய்து கொண்டிருந்த யாழ்.நெல்லியடி வியாபாரிக்கு கொரோனா!

முக கவசத்தை சரியாக அணியாமல் வியாபாரம் செய்து கொண்டிருந்த நெல்லியடி பழைய சந்தை வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்தி வியாபாரி முக கவசத்தை முறையாக அணியாமல் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் பொது சுகாதார பரிசோதகர்களால்

கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த 19ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியான நிலையில்

வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்ப்பட்டிருக்கின்றது. இதேவேளை நேற்றய தினம் வடமராட்சியில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Previous articleசங்குப்பிட்டி பிள்ளையார் சுருவத்தை அகற்றவேண்டுமென நான் ஒருபோதும் கூறவில்லை!
Next articleதிருகோணமலை தம்பலகாமம் பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி!