கொழும்பில் அதிகரித்துச் செல்லுகின்ற கொரோனா தொற்று!

கொரோனா தொற்றினால் கொழும்பு நாரஹன்பிட்ட மற்றும் ஏனைய பகுதிகளில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் 73 பேர் நாரஹன்பிட்டியில் கண்டறியப்பட்டனர்.

இதே காலகட்டத்தில் வெள்ளவத்தையில் 45, அவிசாவெல்லயில் 51, தெஹிவலயில் 43, மஹாரகமாயில் 56, கல்கிசையில், 32, மற்றும் பிலியந்தலையில் 74 பேர் கண்டறியபட்டுள்ளனர்.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் நேற்று மொத்தம் 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று நாட்டில் மொத்தமாக 3547 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Previous articleதிருகோணமலை தம்பலகாமம் பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி!
Next articleகிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் மனைவிக்கு கொரோனா : பிள்ளைகளுடன் கணவன் உண்ணாவிரத போராட்டம்