யாழில் தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் 15 பேருக்கு கொரொனா!

யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஊழியர்கள் 15 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி வட்டாரங்கள் அருவிக்குத் தெரிவித்தன.

அண்மையில் குறித்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பிரிவைச் சேர்ந்த பெண் மற்றும் ஆண் ஊழியர்கள் இருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அதன் தொடராக குறித்த தொலைக்காட்சி ஊழியர்களுக்கு 03 கட்டங்களாக பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இன்று வரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் குறித்த தொலைக்காட்சியின் வாகனச் சாரதி உட்பட்ட ஊழியர்கள் 15 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Previous articleஇலங்கை பொலிஸ் கல்லூரியில் 37 பயிற்சியாளர்களுக்கு தொற்று கண்டுபிடிப்பு
Next articleவாக்குவாதத்தின் இடையே துப்பாக்கியால் சுட்ட ரொறன்ரோ பொலிஸ்: ஆபத்தான நிலையில் ஒருவர்