கொரோனாவால் இலங்கையில் மேலும் 46 பேர் பலி!

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, இலங்கையில் 1,178 பேர் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 161,239 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 126,995 பேர் பூரணமாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஈரானிய இரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து!
Next articleஇன்று இதுவரையில் 2,945 பேருக்கு கொரோனா!