யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள், தாதியர்கள் நோயாளிகளின் தொலைபேசிகளை திருடிவந்த கும்பல் ஓன்று சிக்கியது!

யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் நோயாளிகளின் தொலைபேசிகளை திருடிவந்த கும்பல் கையும் களவுமாக மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, தொலைபேசி திருடுவதற்கென தனது மோட்டார் சைக்கிளை வெளியில் விட்டு நுழைவாயினுள் வந்த திருடன்

அங்கு வழமையாக திருட்டுகென ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தார். தகவல் அறிந்த யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலமையிலான

மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் அவரது குழுவினரும் மற்றும் வைத்தியசாலை காவலாளியின் உதவியுடன் கையும் மெய்யுமாக குறித்த திருடனை பிடித்தனர்.

விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட புலனாய்வு பிரிவினர், மாவட்ட குற்ற தடுப்பு பொறுப்பதிகாரியும் அவரது குழுவினரும் இணைந்து தேடுதல் வேட்டையில்

இவரிடம் குறைந்த விலையில் தொலைபேசியை வாங்குபவரை இனுவில் துரைவீதியிலும் மற்றும் தாவடியிலும் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 7தொலைபேசிகளையும் கைப்பற்றியுள்ளனர் சந்தேக நபரை விசாரனையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

Previous articleகனடாவில் பெரும்பாலானோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டாலும், மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு
Next articleநாளை பயண கட்டுப்பாடு தளர்த்தப்படும்போது இதுவே நடைமுறை!