வாகனங்களில் வந்தால் வவுனியாவிற்குள் நுழைய முடியாது!

வவுனியாவில் மோட்டார்சைக்கிள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் மூலமாக நகருக்குள் பிரவேசிக்கும் பொதுமக்கள் பொலிசாரால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை இன்று காலை முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியா நகருக்குள் நுழையும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனையடுத்து நகரின் முக்கிய பகுதிகளில் கடமையில் ஈடுபட்டுவரும் பொலிசார், அவசியத்தேவை கருதி மோட்டார் சைக்கிள்களில் செல்வோரைத்தவிர்ந்த ஏனைய வாகனங்களில் பயணிக்கும் அனைவரையும் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதேவேளை வவுனியா நகரில் அத்தியவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மருந்தகங்கள், போன்றவை திறந்திருப்பதுடன் ஏனைய வியாபாரநிலையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleநாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, மனைவிக்கு தொற்று!
Next articleஅதிஸ்டவசமாக தப்பிய வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்!