தமிழகத்தில் இலங்கை ஏதிலிகள் முகாம்களில் வசிக்கும் 110 பேருக்கு கொவிட்!

தமிழகத்தில் உடுமலை மற்றும் மேட்டுப்பாளையத்தில் உள்ள இலங்கை ஏதிலிகள் முகாம்களில் வசிக்கும் 110 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

உடுமலை பகுதியில் உள்ள இலங்கை ஏதிலிகள் முகாமில் 69 பேர் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், மேட்டுப்பாளையத்தில் உள்ள இலங்கை ஏதிலிகள் முகாமில் வசிப்பவர்களில் 41 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் குறித்த ஏதிலிகள் முகாம்களில் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleகனடாவில் வளர்த்தவரையே கடித்துக்குதறிய நாய்!
Next articleஇன்றிரவு முதல் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடு அமுலில்!