முடக்கத்துக்கு மத்தியில் வீடுகளில் நிகழ்ந்தமோதல் – 150திற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில்

கொரோனா தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக 150திற்கும் அதிகமானோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையின் அதிகாரியொருவர் செய்திப் பிரிவிற்கு இதனை உறுதிப்படுத்தினார்.

மேலும் இவ்வாறு காயமடைந்து, அனுமதிக்கப்பட்டவர்களில் ஆண்களே அதிகம் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 112 ஆண்கள், இவ்வாறான மோதல் சம்பவங்களினால் காயமடைந்து அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வீட்டிற்குள் இடம்பெற்ற மோதல் சம்பவம் காரணமாக ஆண்ணொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள வண்ணம் உள்ளது.

Previous articleஇன்றிரவு முதல் மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடு அமுலில்!
Next articleமூளை செல்களின் வளர்ச்சிக்கு உதவும் பீட்ரூட்!