வவுனியாவில் கொரோனா காலத்திலும் வாள்வெட்டு குழு அட்டகாசம் 6 பேரின் நிலை

வவுனியா – ஆச்சிபுரம் கிராமத்தில் நேற்றய தினம் இரவு 11 மணியளவில் வாள்வெட்டு குழு வீடு புகுந்து நடத்திய தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

கத்திகளுடன் வீட்டுக்குள் புகுந்த குழுவினர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்ட கும்பல் தப்பிச் சென்றுள்ள நிலையில் தாக்குதல் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Previous articleநீர்கொழும்பு கடற்கரையில் எரியும் கப்பலின் சிதைந்த பொருட்கள்?
Next articleஇலங்கையில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களின் உடல்கள் கார்ட் போர்ட் பெட்டிகளில் அடக்கம்!