எரியும் கப்பல் மீது கொட்டப்பட்ட 850 கிலோ தூள் கொட்டப்பட்டது ஏன்?

கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் தீப்பிடித்து எரிகின்ற கப்பலில் தீயைக் கட்டுப்படுத்த 850 கிலோ தூள் உலர் வேதி தூள் கொட்டப்பட்டன.

இரண்டாவது நாளாகவும் முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில் தீயை அணைக்கும் பணியில் இலங்கை மற்றும் இந்திய கடற்படையின் படகுகள் இதில் ஈடுபட்டுள்ளன.

அத்துடன் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல்-212 ரக ஹெலிகொப்டர் உதவியும் இதற்காகப் பெறப்பட்டுள்ளது.

மேலும் ஹெலிகொப்டர் ஊடாக, இதுவரை 850 கிலோ கிராம் தீயணைப்பு உலர் வேதி தூள் (dry chemical powder) தீப்பிடித்து எரிகின்ற கப்பல் மீது கொட்டப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.