யாழ் ஆனைக்கோட்டையில் மரம் வீழ்ந்து வீடு சேதம்!

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை முருகமூர்த்தி ஆலயத்திற்கு பின்னாலுள்ள வீடொன்று பனைமரம் வீழ்ந்து சேதமடைந்துள்ளது.

நேற்று(செவ்வாய்கிழமை) மாலை வீசிய கடும் காற்றினால் அருகிலுள்ள காணிலுள்ள பனைமரம் முறிந்து வீழ்ந்த்தனால் வீடொன்று சேதமடைந்துள்ளது.

இதனால் வீட்டிலிருந்த ஒலிபெருக்கி உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்துள்ளன. இதனால் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த வீட்டிற்கு முன்னூலுள்ள வெற்றுக்காணியிலிருந்த பனை மரமும் வீழ்ந்துள்ளது. ஏனைய பனை மரங்கள் தற்போது வெட்டப்படுகின்றன.

Previous articleகனடாவில் கடையில் நின்றுகொண்டிருந்த புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த கதி!
Next articleகொரோனா சிகிச்சை நிலையத்தில் உரிய வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு!