கொரோனா சிகிச்சை நிலையத்தில் உரிய வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு!

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் உரிய வசதிகள் செய்துதரப்படவில்லை என நோயாளிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தற்போது மழையுடனான காலநிலை மற்றும் அதிக காற்று வீசி வருவதால், விடுதிக்குள் மழைத்தூறல்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வயது முதிர்ந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

எனவே நோயாளர்களின் நலன்கருதி குறித்த வைத்தியசாலையில் மாற்று ஏற்பாடுகளை செய்யவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் 200 கட்டில்களை கொண்ட கொரோனா வைத்தியசாலையாக இராணுவத்தினரால் அண்மையில் மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.