கொரோனாவில் இருந்து மீண்ட 105 வயது மூதாட்டி!

பெங்களூருவில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 105 வயது மூதாட்டி ஒருவர் வைரசை எதிர்த்து போராடி தொற்றிலிருந்து மீண்டுள்ளார்.

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. அங்கு ஒவ்வொரு நாளும் 450ற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுகின்றது.

இந்நிலையில் தொற்றுக்கு உள்ளாகும் நபர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் கர்நாடகத்தில் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளான 105 வயது மூதாட்டி மீண்டு வந்து ஏனையவர்களுக்கும் கொரோனாவை எதிர்க்கும் தைரியத்தை கொடுத்துள்ளார்.