நடிகர் விஜயகாந்த் திடீர் மருத்துவமனையில் அனுமதி!

தமிழ் சினிமாவில் மிகவும் கொண்டாடப்பட வேண்டிய நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். சினிமாவிற்காக இவர் செய்த விடயங்களை இதுவரை எந்த நடிகரும் செய்யவில்லை என்றே கூறலாம்,

மேலும் சினிமாவில் சாதித்ததை போல அரசியலிலும் மக்களின் மனதை கவர்ந்தவர் என்று தான் கூற வேண்டும். பெரிய அரசியல்வாதியாக வலம் வருவார் என்று பார்த்தால் உடல் நலக் குறைவால் அவர் எதிலும் இறங்குவதில்லை.

மேலும் கடந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த விஜயகாந்திற்கு இன்று புதன்கிழமை அதிகாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

மேலும் உடனே அவரை அவரது குடும்பத்தார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

அத்தோடு அவரது கட்சி சார்பில் வந்த அறிக்கையில் வழக்கமான சிகிச்சைக்காக தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என்று கூறியுள்ளனர்.