இந்த வருடத்திற்குள் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசி!

இந்த வருடத்திற்குள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 60 சதவீதத்திற்கும் 70 சதவீதத்திற்கும் இடைப்பட்ட மக்களுக்கு தடுப்பூசி ஏற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்படி விரைவில் 14 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகளை சீனாவில் இருந்து கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பத்து லட்சம் அஸ்ரா செனெகா தடுப்பூசிகளும் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இதேவேளை சீனாவின் 5 இலட்சம் தடுப்பூசிகள் நேற்று இலங்கைக்கு கிடைத்துள்ளன.

இதற்கு முன்னர் 6 லட்சம் தடுப்பூசிகள் சீனாவில் இருந்து கிடைக்கப் பெற்றன.

ஊடகவியலாளர்களுக்கு மாவட்ட மட்டத்தில் கொவிட் தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.