உலகளவில் 17 கோடியை ​நெருங்கும் கொரோனா பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16.85 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 34.99 லட்சமாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் தொற்று பாதிப்போர் மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 168,532,575 ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 3,499,942 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 153,568,859 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 14,963,716 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 95,476 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,947,189 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிகை 605,208 ஆக உயர்ந்துள்ளது.

நோய்த்தொற்று பாதிப்புகளைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,157,795 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் 311,421 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,195,981 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழப்புகளை பொறுத்தவரை, 452,224 பேர் உயிரிழப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.