யாழில் விதிக்கப்பட்ட பயணத்தடைகளை மீறி வெளியில் வந்த நபர் ஒருவர் தலைதெறிக்க ஓடிய காணொளி!

யாழில் விதிக்கப்பட்ட பயணத்தடைகளை மீறி வெளியில் வந்த நபர் ஒருவர் இராணுவத்தினரை பார்த்ததும் தலைதெறிக்க ஓடிய காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

இதேவேளை யாழ் நகரம் எங்கும் கடைகள் பூட்டப்பட்டு வீதிகளில் மக்கள் நடமாட்டம் அற்று காணப்படுகின்றது.

அத்தியாவசிய தேவைகள் மற்றும் வைத்தியசாலை தேவைகள் என்பனவற்றிற்கு மட்டுமே மக்கள் பயணிப்பதை காணமுடிகின்றது.

இந்நிலையில் நபர் ஒருவர் ஊரடங்கையும் மீறி வெளியில் மீதிவண்டியில் சுற்றியுள்ளார். இதன்போது இராணுவத்தினரை கண்ட குறித்த நபர் சைக்கிளை விட்டுவிட்டு பதறியடித்து ஒடிய சம்பவம் காணொளியாக பதிவாகியுள்ளது.