யாழில் திடீரென உயிரிழந்த ஐந்து பிள்ளைகளின் தாயார்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் மூத்தவிநாயகர் பகுதியில் ஐந்து பிள்ளைகளின் தாயார் திடீரென உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் சுகயீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கரணவாய் மூத்த விநாயகர் பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயார் சண்முகநாதன் சாந்தி [வயது 56 ] என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.