எக்ஸ்பிரஸ் பேர் ஒதுங்கிய பொதிகளில் இருந்த பொருட்கள் இவைதான்!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ ஏற்பட்டதை அடுத்து கடலில் வீழ்ந்த பொருட்களில் சில பொதிகள் நீர்கொழும்பு உட்பட கடலோரப் பிரதேசங்களில் சேர்ந்தன.

அவற்றின் பல பொதிகள் அப்பிரதேச மக்களால் சுமந்து செல்லப்பட்டன.

குறித்த பொதிகளில் இருந்தது என்ன என்பது பற்றிய தகவல்களே இப்போது வெளியாகியிருக்கின்றன.

Low Density Polyethylene எனப்படும் குறைந்த அடர்த்தி கொண்ட பொலித்தீன் மற்றும் மத்திய அடர்த்தி கொண்ட பொதித்தீன் என்பன காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவற்றைக் கொண்டு பிளாஸ்டிக் பொதிகள், தண்ணீர் போத்தல், ஷொப்பிங் பை, மின்சார கேபிள்கள் என பல விடயங்களை உற்பத்தி செய்ய முடியும்.

இவற்றை குறைந்தது ஒரு கிலோ 30 அமெரிக்க டொலர்கள் வரை விற்பனை செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.