மட்டக்களப்பில் அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 128 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் இதுவரையில் அதிகளவான தொற்றாளர்கள் இதுவெனவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனையில் 32 பொலிஸாருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

வவுணதீவு பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனையில் 14 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.