எதிர்வரும் 31ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து வெளியாகியுள்ள தகவல்!

எதிர்வரும் 31ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் நிலைமைகளை அவதானித்து இது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

31ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தல் குறித்து இன்று தீர்மானிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் கடந்த 25ஆம் திகதி முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய பொருட்களை மக்களை கொள்வனவு செய்யும் நோக்கில் 31ஆம் திகதி மற்றும் 4ஆம் திகதிகளில் இந்தப் பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கடந்த 25ஆம் திகதி அத்தியாவசிய பொருள் கொள்வனவிற்காக பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட போது மக்களின் செயற்பாடுகள் குறித்து இராணுவத் தளபதி கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.