கிளிநொச்சியில் ஆபத்தான கிபீர் குண்டு மீட்பு!

கிளிநொச்சி உருத்திரபுரம் – சிவநகர் பகுதியில் இன்று கிபீர் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் உள்ள கோவில் காணி ஒன்றில் பெக்கோ வாகனத்தின் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது 2009 இற்கு முன் யுத்த காலத்தின் போது ஏவப்பட்ட கிபீர் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

கோவில்களில் துப்புரவு பணியில் கொண்டிருந்தவர்கள் குண்டு அடையாளம் காணப்பட்ட பின்னர் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இக்குண்டை பொலிஸ் விசேட அதிரடி படையினர் மூலம் செயலிழக்க உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.