நல்லுார் அரசடிப்பகுதி முடக்கப்படுகின்றது!

நல்லூர் ஜே 103 கிராம அலுவலகர் பிரிவில் ஒரு பகுதியான அரசடியை
தனிமைப்படுத்துவதற்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்டச் செயலாளர் ஊடாக
கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் செயலணிக்கு யாழ்ப்பாணம் மாநகர சுகாதார
மருத்துவ அதிகாரியினால் கோரிக்கை முன்வைக்கட்டுள்ளதாக அறிய முடிகிறது.

நல்லூர் அரசடியில் கடந்த ஒரு வாரத்தில் 22 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதனால் அரசடியில் வசியும் மக்களை சுயதனிமைப்படுத்துவதுடன் அந்தப் பகுதியை
முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous articleகடந்த 06 நாட்களாக தீப்பற்றி எரிந்த கப்பலில் தீ முழுமையாக கட்டுப்பாட்டில்!
Next articleயாழில் கண் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 2000 நோயாளிகளுக்கு இலவசமாக சத்திரசிக்சை செய்யும் மருத்துவர்!