கஞ்சா போதைப்பொருளுடன் சிக்கிய இளம் யுவதி!

திருகோணமலை-மிரிஸ்வெவ பகுதியில் கஞ்சா போதைப் பொருளுடன் பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (27) பிற்பகல் இடம்பெற்ற இக்கைது தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,

தனது சக உறவினர்களின் பிள்ளைகளை வைத்துக்கொண்டு கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது கஞ்சா போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் அதே இடத்தைச் சேர்ந்த 38 வயது உடையவர் ஆவார். .

கைது செய்யப்பட்ட பெண் ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட பெண்ணை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.