நேற்றைய தனம் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 27 பேர் பலி!

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை சுகாதார பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1325 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய, இன்று அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,572 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 174,849 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.