யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவிலும் ட்ரோன் கமரா கண்காணிப்பில்!

கோப்பாய் பொலிஸ் பிரிவில் விமானப்படையின் உதவியுடன் ட்ரோன் கமரா ஊடான கண்காணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை இன்று முற்பகல் 11.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை விமானப்படையின் உதவியுடன் பயணத்தடை காலப்பகுதியில் ட்ரோன்; கமராவின் உதவியுடன் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறுவோரை கண்டறந்து கைது செய்யும் பணி கடந்த ஒருவார காலமாக இடம்பெறுகிறது.

முதன்முறையாக யாழ். மாநகரில் நேற்று முன்தினம் கண்காணிப்புப் பணி ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் கோப்பாய் பொலிஸாரால் இந்தப்பணி இன்று முன்னெடுக்கப்படுகிறது.