பயணக் கட்டுப்பாட்டை மீறி மீன் வாங்க சென்றோரை அள்ளிச்சென்ற அதிகாரிகள்!

பயணக் கட்டுப்பாட்டை மீறி பொத்துவில் களப்பு ஆற்றில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது, நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டவர்களும், மீன் வாங்குவதற்குச் சென்ற பொதுமக்களும் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி அலுவலக மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.

முகக்கவசம் அணியாது, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது கூட்டமாக இருந்த14 பேருகு எதிராக இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆலோசனைக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Previous articleஜூன் 7 வரை தளர்வுகள் இன்றி நடமாட்டக் கட்டுப்பாடு நீடிப்பு!
Next articleயாழில் முன்னாள் போராளி ஒருவர் அதிரடியாக கைது!