எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலில் இருந்து கரையொதுங்கிய திரவியங்கள்!

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்துள்ள கொள்கலன்கள், திரவியங்கள் மற்றும் சிதைவுகள் இலங்கையின் மேற்கு கடற் கரையில் கரை தட்டி வருகின்றன.

இவ்வாறான கொள்கலன்கள், திரவியங்கள் மற்றும் சிதைவுகள் மேற்கு கடற் கரைப் பகுதியான வெள்ளவத்தை மற்றும் காலி முகத்திடல் கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.