சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கின்ற 40 இலங்கையர்கள் விபரங்களை கோரும் அரசாங்கம்!

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கின்ற 40 இலங்கையர்கள் தொடர்பிலான தகவல்களை அந்நாட்டு அரசாங்கத்திடம் இலங்கை கோரியிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது.

அந்த கணக்குகளில் கோடிக்கணக்கான சுவிஸ் பிரேங் பணம் உள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் இலங்கை அரசாங்கம் முன்வைத்திருக்கின்ற இந்தக் கோரிக்கையை சுவிஸ் நிராகரித்திருப்பதாக கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியாயுள்ளது.

Advertisement