யாழில் வாடகைக்கு முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தி கிளிநொச்சியில் கைவரிசையை காட்டிய கில்லாடி!

யாழிலிருந்து கிளிநொச்சிக்கு முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தி சென்றவர் சாரதியிடம் கைவரிசை…..

யாழ் நகரில் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்திலிருந்து கிளிநொச்சிக்கு முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தி சென்ற நபர் கிளிநொச்சி கரடிப்போக்கு நாற்பது ஏக்கர் பாலத்தடி பகுதியில் மேலும் சிலரை அப்பகுதிக்கு வரவழைத்து முச்சக்கரவண்டி சாரதியினை அச்சுறுத்தி அவரிடமிருந்து ஒரு தொகை பணத்தினை சூறையாடிச்சென்றுள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.