ஒரே நாளில் சடுதியாக உயர்ந்த கொரோனா உயிரிழப்புகள்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,363 ஆக அதிகரித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை 2845 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இதுவரையில் ஒரு இலட்சத்து 77 706 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.