கிளிநொச்சி 94 முல்லைத்தீவு 53 வடக்கில் 194 பேருக்கு தொற்றுதி!

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் ஆடைத் தெழிற்சாலை கொத்தணித் தொற்று நோயாளர்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கிளிநொச்சியில் நேற்று 94 பேருக்கும் முல்லைத்தீவில் 53 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட் – 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட வவுனியா -24, யாழ்ப்பாணம் -22, மன்னாரில் -01 என தொற்று நோயாளிகள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டனர்.

இவா்களுடன் வடக்கில் நேற்று மொத்தம் 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இலங்கையில் மிக அதிகளவாக களுத்துறை மாவட்டத்தில் நேற்று 512 தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். கம்பஹா – 443, கொழும்பு 281, கண்டி271, குருநாகலில் 177 தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

ஏனைய மாவட்டங்களில் இரண்டை இலக்க தொற்று நோயாளர்களே நேற்று உறுதிப்படுத்தப்பட்டனர்.

நாட்டில் நேற்று மொத்தம் 2,850 கொரோனா தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மொத்த தெற்று நோயாளர் தொகை 177,710 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 39 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில் மொத்த மரணங்கள் 1,363-ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.