வவுனியாவில் கொரோனாவுக்கு பலியான நபர்!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

அண்மையில் ஶ்ரீராமபுரத்தை சேர்ந்த நடேசன் பாலசந்திரன் (65) என்பவர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.