திருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலயங்களில் 5 கொவிட் மரணங்கள் பதிவு!

திருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலயங்களில் 5 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்ததாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு பேரும், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் உள்ளடங்களாக 5 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து திருகோணமலை மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 73 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் கிண்ணியா, மூதூர், உப்புவெளி, திருகோணமலை, குச்சவெளி, குறிஞ்சாக்கேணி, மூதூர் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த 73 பேருக்கே கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 207ஆக அதிகரித்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந் கூறியுள்ளார்.