நுவரெலியாவில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் 149 பேருக்கு கொரோனா!

நுவரெலியா -ஹாவாஎலிய பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் 149 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் பெறுபேறுகள் நேற்று கிடைக்கப்பெற்றுள்ளன.

இதற்கமையவே, இவ்வாறு 149 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இவர்களுடன் தொடர்பை பேணிய 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.