முல்லைத்தீவில் புதிய கொவிட் – 19 சிகிச்சை நிலையம் திறக்கப்பட்டது

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில், புதிய கொவிட்-19 சிகிச்சை நிலைய கட்டட தொகுதி இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் விமலநாதன், இராணுவ கட்டளைத் தளபதி மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் உள்ளிட்டோரின் பங்குபற்றலுடன் கொவிட்-19 சிகிச்சை நிலைய கட்டட தொகுதி திறந்து வைக்கப்பட்டது.

குறித்த விடுதியில் 14 கட்டில்கள் காணப்படுவதுடன் இராணுவத்தால் இது கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.