இராணுவக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது சாந்தபுரம் கிராமம்!

சாந்தபுரம் கிராமத்திலுள்ள மக்கள் வெளியே செல்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, இராணுவக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சாந்தபுரம் கிராமத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத் துறையினர் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

மேலும் குறித்த கிராமத்திலுள்ள பெரும்பாலானோர், பயணக்கட்டுப்பாட்டினை மீறி பல்வேறு நடவடிக்கைகளுக்காக ஒன்றுக் கூடுவதனை அவதானிக்க கூடியதாக உள்ளதாக சுகாதாரத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே குறித்த பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், பயணக்கட்டுப்பாட்டு நடைமுறை இறுக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் பலர், ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகின்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.