சற்றுமுன் மேலும் 788 பேருக்கு தொற்று – இன்றைய 2,827ஆக அதிகரிப்பு

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 788 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,827ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 180,538 ஆக உயர்வடைந்துள்ளது.

முதலாம் இணைப்பு

இலங்கையில் இன்றும் கோவிட் தொற்றினால் 2 ஆயிரத்து 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் இதனை தெரிவித்துள்ளது.

இந்த தொற்றுக்கள் அனைத்தும் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவை என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கண்டறியப்பட்ட கோவிட் தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 79ஆயிரத்து 750 ஆக உயர்ந்துள்ளது.

உத்தியோகபூர்வ தகவல்களின் படி, வைரஸால் பாதிக்கப்பட்ட 29,996 பேர் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், தொற்றில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 1லட்சத்து 48ஆயிரத்து 391 ஆகும்.