தீ விபத்துக்கு உள்ளான கப்பலின் தலைவர் உள்ளிட்டவர்களிடம் வாக்குமூலம்

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் தலைவர் உள்ளிட்ட பணிக்குழாமினரிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவர்களிடம் நாளை (திங்கட்கிழமை) வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

குறித்த கப்பல் தீப்பிடித்த விடயம் தொடர்பாக அவர்களிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பலில் நைட்ரையிட் கசிவு காரணமாக கடந்த 19 ஆம் திகதி தீப்பரவல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.