யாழ்ப்பாணம், கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

யாழ்ப்பாணம், கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) முதல் ஆரம்பமாவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு அமைய தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று யாழ்ப்பாணத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, தலா 50 ஆயிரம் தடுப்பூசிகள் வீதம் சினோபாம் தடுப்பூசிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில், கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டு 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை சேர்ந்த 61 கிராம சேவையாளர் பிரிவுகளில் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதோடு காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளமை குறிப்பிடதக்கது .