சற்றுமுன் இரத்தினபுரியில் நிகழ்ந்த கோர விபத்து – 35 பேர் வைத்தியசாலையில்

இரத்தினபுரி நிவித்திகலை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேயிலைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களைக் ஏற்றிச் செல்லும் பேருந்தே இன்றுகாலை விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், குறித்த விபத்தில் காயமடைந்த 35 பேரும் வத்துபிடிவல மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், காயமடைந்த இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.